Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : அக் 24, 2024 03:13 PM


Google News
Latest Tamil News
அக்.25 ஐப்பசி 8: துாத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லுார் மரகதாம்பிகை வீதியுலா. திருநெல்வேலி காந்திமதி அம்மன் வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம். சோளிங்கபுரம் அமிர்த வல்லித்தாயார் பக்தோசிதப் பெருமாள் திருக்கல்யாணம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

அக்.26 ஐப்பசி 9: திருவெல்வேலி காந்திமதி அம்மன் தேர். சங்கரன்கோவில் கோமதியம்மன், பத்தமடை மீனாட்சி அம்மன் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் அலங்கார திருமஞ்சனம்.

அக்.27 ஐப்பசி 10: திருநெல்வேலி காந்திமதி அம்மன் தங்கச் சப்பரத்தில் தபசுக் காட்சி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உற்ஸவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிேஷகம்.

அக்.28 ஐப்பசி 11: ஏகாதசி விரதம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், பத்தமடை மீனாட்சி அம்மன், வீரவநல்லுார் மரகதாம்பிகை, துாத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை, சங்கரன்கோவில் கோமதியம்மன் திருக்கல்யாணம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். வாஸ்து நாள், காலை 7:44 - 8:20 மணி வரை மனை, மடம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

அக்.29 ஐப்பசி 12: பிரதோஷம். தென்காசி, கடையம் சிவபெருமான் திருக்கல்யாணம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.

அக்.30 ஐப்பசி 13: நரக சதுர்த்தசி ஸ்நானம். மாத சிவராத்திரி. திருவனந்தபுரம், திருவட்டாறு கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரானுக்கு பால் அபிேஷகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

அக்.31 ஐப்பசி 14: முகூர்த்த நாள். தீபாவளி. வள்ளியூர் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம் சாற்றியருளல். சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us