Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனத்தெளிவுக்கு...

மனத்தெளிவுக்கு...

மனத்தெளிவுக்கு...

மனத்தெளிவுக்கு...

ADDED : டிச 20, 2024 10:56 AM


Google News
Latest Tamil News
பெரியபுராணத்தில் உள்ள சிவநாமங்களை தொகுத்துள்ளோம். இதைப்பாடினால் பயம் தீரும். மனதில் தெளிவு பிறக்கும்.

மைதிகழ் கண்டா போற்றி

எண்தோள் மறையவா போற்றி

குழைப்பொலி காதினாய் போற்றி

வெள்ளை விடையவா போற்றி

பொருவிடைப் பாகா போற்றி

ஆரம் என்பு புனைந்த ஐயா போற்றி

இமக் குலக்கொடி பாகா போற்றி

திரை செய் நீர் சடையா போற்றி

மங்கையைப் பாகமாய் உடையாய் போற்றி

தில்லை மன்றுள் ஆடிய பெருமான் போற்றி

இமயப் பாவை துணைவா போற்றி

வன்தாள் மேருச்சிலை வளைத்துப் புரங்கள்செற்றவா போற்றி

சேணார் மேருச் சிலை வளைத்த சிவனார் போற்றி

பிறைசூடிப் பூணார் அரவம் புனைந்தாய் போற்றி

அந்தி வண்ணா போற்றி

முக்கண் நக்கராம் முதல்வா போற்றி

பிறைத்தளிர்ச்சடைப் பெருந்தகையே போற்றி

கண்ணுதற் கரந்தோன் போற்றி

கங்கைமடுத்ததும்பிய வளர்சடைமறைத்த மறையோன் போற்றி

மறி கரந்து தண்டேந்திய மறையவா போற்றி

மங்கைபாகராம் மறையவா போற்றி

மலர்மிசை அயனும் மாலும் காணுதற்கரிய வள்ளலே போற்றி

அழலவிர் சடையா போற்றி

களி யானையின் ஈர் உரியாய் போற்றி

எளியார் வலியாம் இறைவா போற்றி

அளியார் அடியார் அறிவே போற்றி

தெளிவார் அமுதே போற்றி

ஆறும் மதியும் அணியும் சடையா போற்றி

இழையணி காதினாய் போற்றி

தேனாரும் தண் பூங்கொன்றைச் சடையா போற்றி

நஞ்சணி கண்டா போற்றி

மேலவர் புரங்கள் செற்ற விடையா போற்றி

திங்கள் சேர் சடையா போற்றி

ஏக நாயகா போற்றி

திருக்காளத்தி நாயனார் போற்றி

அண்ணலே போற்றி

விமலா போற்றி

திருக்காளத்தி மலையினாய் போற்றி

காணுதற்கரியாய் போற்றி

குழையணி காதினாய் போற்றி

எந்தையே போற்றி

அரும்பெறல் தம்பிரானே போற்றி

வானவர் நாயகா போற்றி

முதல்வனே போற்றி

திங்கள் அணிந்த சடைமுடிக்கற்றை அங்கணா போற்றி

காளத்தி அண்ணலே போற்றி

காளத்தி அப்பரே போற்றி

திருக்காளத்தி முதல்வனே போற்றி

மின் திகழும் சடை மவுலி வேதியா போற்றி

புனற் சடிலத் திருமுடியா போற்றி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us