ADDED : செப் 02, 2023 06:07 PM
பிரச்னை ஒன்றிற்கு தீர்வு கிடைக்காமல் குழம்பினார் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அவரது நண்பரிடம் பிரச்னையை சொன்னார். அவருக்கும் எப்படி தீர்வு காண்பது என தெரியவில்லை. இருந்தாலும் ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன், ''நண்பரே கலங்காதீர். ஆண்டவர் உம்பக்கம் இருக்கிறார்'' என்றார் நண்பர். ''ஆண்டவர் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல; நான் அவர் பக்கம் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்றார் லிங்கன். குழப்பமான நிலையிலும் அவரிடம் இருந்த தெளிவைப் பார்த்தீர்களா!