ADDED : ஆக 25, 2023 11:00 AM
ஒரு புதுமணத் தம்பதி காட்டில் இருக்கும் தேவாலயத்திற்கு புறப்பட்டனர். வழியில் கிடந்த முள்ளை அப்புறப்படுத்தி விட்டு மனைவியை அழைத்துச் சென்றார் கணவர். ஆறுமாதத்திற்கு பிறகு அங்கு சென்ற போது 'முள் கிடக்கிறது... பார்த்து வா' என சொல்லி விட்டு நகர்ந்தார். ஓராண்டு கழித்து சென்ற போதும் அதே நிலை தான். ஒன்றுமே சொல்லாமல் நடந்தார். இப்படித்தான் பல மனிதர்கள் ஒரு செயலில் ஆரம்பத்தில் காட்டும் ஆர்வத்தை கடைசி வரை காட்டுவதில்லை.