Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/இது மட்டுமே நிச்சயம்

இது மட்டுமே நிச்சயம்

இது மட்டுமே நிச்சயம்

இது மட்டுமே நிச்சயம்

ADDED : பிப் 18, 2013 11:36 AM


Google News
Latest Tamil News
இறப்பு பற்றி ஒரு சாரார் சிந்திப்பதே இல்லை. ஒரு சாரார், அது எப்போது வருமோ என்று பயப்படுகிறார்கள். இறப்பு நிச்சயம் என தெரிந்த பிறகும், அதுபற்றி பயம் கொள்வதில் அர்த்தம் இல்லை. மார்ட்டின் லூத்தர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புராட்டஸ்டென்ட் இயக்கத்தின் தந்தை. இவரது போக்கு கத்தோலிக்க உயர்மட்ட சங்க உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கு மாறாக நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, அவரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மார்ட்டின் லூத்தருக்கு அப்போதைய இளவரசர் மூன்றாம் பிரெட்ரிக் ஆதரவு காட்டி வந்தார். இதன் காரணமாக அவர் மீதான நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், போப்பாண்டவரக உறுப்பினர்கள், லூத்தர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து இளவரசரும் ஆதரவை விலக்கி கொண்டார்.

லூத்தருக்கு நெருங்கியவர்கள் அவரை அணுகி, 'இளவரசர் உங்களை கைவிட்டு விட்டார். இப்போது நீங்கள் எங்கே புகலடையப் போகிறீர்கள்?' என்று கேட்டனர்.

லூத்தர் சற்றும் கலங்கவில்லை.

''இதென்ன கேள்வி? நான் எப்பொழுதும் பரலோகத்தையே என் புகலிடமாக வைத்திருக்கிறேன்,''என்று பதறாமல் பதிலளித்தார். பின்னால் வரும் மரணத்தை முன் னாலேயே ஏற்க அவர் தயாராக இருந்தார்.

லூத்தரின் வாழ்க்கையைப் பாடமாகக் கொண்டு, மரணம் கண்டு அஞ்சாத மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us