Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/அங்கேயும் ஒரு தேர்வு

அங்கேயும் ஒரு தேர்வு

அங்கேயும் ஒரு தேர்வு

அங்கேயும் ஒரு தேர்வு

ADDED : செப் 29, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
ஒரு மனிதன் இறந்தவுடன் பரலோகத்துக்கு (சொர்க்கம்) சென்றான். வாசலில் தேவதூதன் தடுத்து நிறுத்தி, 'இதன் உள்ளே செல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்பதை பத்து வாக்கியங்களில் சொல்லிவிட்டு போகவேண்டும். நீ சொல்வது எனக்கு திருப்தியாகி 100 மார்க் வாங்கினால் தான் உள்ளே அனுமதிப்பேன்,'' என்றான்.

அந்த மனிதன், 'நான் அடிக்கடி ஆலயம் போவேன்,'' என்றதும், தூதன் இரண்டு மார்க் போட்டான். காணிக்கை கொடுப்பேன் என்றதும் மூன்று மார்க் கிடைத்தது. குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி கதைகள் சொல்வேன் என்றதும் ஐந்து மார்க் கிடைத்தது. இப்படி பதில் சொல்லியும் 20 மார்க்கை தாண்டவில்லை.

ஒன்பதாவது பதில் முடிந்ததும், பயந்து போன அந்த மனிதன், 'ஐயா! இயேசு என் பாவத்தை ஏற்று ஏற்கனவே ரத்தம் சிந்திவிட்டார், எனவே நான் பாவமற்றவன். இந்த ஒரு தகுதியே நான் முழுமார்க் பெற தகுதியாகும்,'' என்றதும், சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன.

ஆம்... இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை மதித்து வாழ வேண்டும். சமாதானம், கடவுள் மீதான விசுவாசம்.. இன்னும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள நற்கருத்துக்களை மதித்து, பாவம் செய்யாமல் எவர் வாழ்கிறாரோ, அவர் நூற்றுக்கு நூறு மார்க் பெற்று, பரலோகத்தில் எளிதில் நுழைவார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us