ADDED : செப் 10, 2023 06:00 PM
பேருந்து ஒன்றின் நடத்துனர் பயணியைப் பார்த்து, 'டிக்கெட் வாங்கலையா' எனக் கேட்டார். அதில் பயணம் செய்த சிறுவன் மார்ட்டின், பஸ் பாைஸ எடுத்துக் காட்டினான். அதைப் பார்த்ததும், 'நேற்றோடு இந்த பாஸ் முடிந்து விட்டதே' என்றார். திடுக்கிட்டுப் போன மார்ட்டின் ஓடும் பஸ்சில் இருந்து இறங்க முயற்சித்தான். அவனை தடுத்து அமரச் செய்தார் ஒரு இளைஞர். டிக்கெட்டுக்கான பத்து ரூபாயை நடத்துனரிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
பின்னாளில் நன்றாக படித்த சிறுவன் கலெக்டராக ஆனான். அந்த சம்பவம் சிறுவனின் மனதை விட்டு அகலவே இல்லை. அதன் பிறகு அந்த இளைஞரை அவன் சந்திக்கவும் இல்லை. நல்லவர்கள் எப்போதும் தங்களை விளம்பரப்படுத்த விரும்புவதில்லை.