ADDED : அக் 07, 2011 11:45 AM
தேவபக்தியுள்ள முதிர்வயதான தாயார் மரணப் படுக்கையில் விழுந்தார்கள். மரணவேளையும் நெருங்கிற்று. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரது படுக்கையை சுற்றி நின்றார்கள். போதகரும் கேள்விப்பட்டு வந்தார். அருகில் வந்து ''நான் எந்த வேதப்பகுதியை வாசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார்.
''எந்த பகுதியானாலும் சரி, அது அவரை துதிப்பதாகவே இருக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார். பிறகு,
''இது என் கடைசி மூச்சு வேளையாக இருப்பதால் என்னுடைய இறுதி சாட்சியை சொல்லிவிடுகிறேன். சுவாசமுள்ளயாவும் கர்த்தரைத் துதிப்பதாக, அல்லேலுயா!'' என்று சத்தத்தை உயர்த்தி சொல்லி ஜீவனை விட்டார்கள். மரணவேளையிலும் தேவனை மகிமைப்படுத்தி தேவசமுகத்தில் பிரவேசித்த அவருடைய தேவ பக்தியைப் பாருங்கள்.
-தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...