Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/மாறிய வாழ்க்கை பாதை!

மாறிய வாழ்க்கை பாதை!

மாறிய வாழ்க்கை பாதை!

மாறிய வாழ்க்கை பாதை!

ADDED : ஆக 04, 2015 11:41 AM


Google News
Latest Tamil News
'பாவத்தின் சம்பளம் மரணம்'.... இந்த வசனம் ஒரு நாத்திகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விட்டது.

இங்கிலாந்தில் சார்லஸ் பின்னி என்பவர் நாத்திகவாதக் கருத்துக்களில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

நாத்திகத்தில் பெரிய விமர்சகராகி புகழ் பெற்றார். பைபிளில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து, மக்களிடையே சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.

இதற்காக பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே நாத்திகக் கருத்துக்களில் இருந்து வழுவுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. குறிப்பாக 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்ற வசனம் அவரது நெஞ்சைத் தொட்டன.

''ஆம்...நான் ஒரு பாவி! இயேசுவை நான் விசுவாசிக்காமல் இருந்து விட்டேன், அவர் பட்ட பாடுகள் எத்தனை!

ரத்தம் வழிய சிலுவையில் அவர் தொங்கியது

யாருக்காக... நம்மைப் போன்ற பாவிகளுக்காகத் தானே'' என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நாத்திகத்தைக் கைவிட்டு

சுவிசேஷகர் ஆனார். 18ம் நூற்றாண்டின் தலை சிறந்த சுவிசேஷகராக விளங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us