ADDED : ஜூன் 21, 2024 01:47 PM
நீங்கள் பண்பில் சிறந்தவரா என அறிஞர் ஒருவரிடம் கேட்டான் இளைஞன் லாரன்ஸ். 'ஆம்... அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்' என்றார். 'அப்படியானால் அவற்றில் முதலிடம் பெறும் பண்பு எது' எனக் கேட்க 'எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுவதே' என்றார் அறிஞர். அன்பே சிறந்தது.