ADDED : மார் 15, 2024 11:31 AM
நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகளை நல்ல பண்புள்ளவர்களாக பெற்றோர் வளர்க்க வேண்டும். ஏனெனில் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறவர்கள் இன்றைய குழந்தைகளே. நல்ல ஒழுக்கமும், தரமான கல்வியும் அவர்களுக்கு அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பக்தி, பெரியோரை மதித்தல், உதவும் குணம், உயிர்களை நேசித்தல், நேரம் தவறாமை, உடற்பயிற்சியிலும் இளம் பருவத்திலேயே ஈடுபடுத்துவது அவசியம்.