ADDED : மார் 01, 2024 02:25 PM
மரித்து போன தாயை பார்த்து கண்ணீருடன் நின்றாள் அந்த இளம்பெண். ஆராதனை முடிந்து சவப்பெட்டியை குழியில் வைத்து மூடியதும் அங்கு கூடிய அனைவரும் கலைந்தனர். அவளிடம் பாதிரியார், 'தாயை மட்டுமே சிந்தித்தால் துக்கம் அதிகமாகும். வானத்தை அண்ணாந்து பார். அங்கே ஆண்டவர் இருக்கிறார். அவரிடம் முறையிடு. அவரே உனக்கு ஆறுதல் அளிக்க வல்லவர்' என்றார். இரக்கம் செய்யும் வரைக்கும் அவரை நோக்கி பார்த்திருங்கள் என்கிறது பைபிள்.