ADDED : டிச 22, 2023 04:51 PM
நமக்கு எண்ணற்ற ஆசை இருந்தாலும் அவை நம்மை விட்டுப்பிரியும் அல்லது நாம் அதை விட்டுப் பிரிவோம். இறப்பிற்கு முன்பு இதை உணர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதையும் மீறி ஆசைகளை வளர்த்தால் துன்பங்களை சந்திக்க நேரிடும். ஆசைகளை குறைக்க குறைக்க துக்கமும் குறையும். எனவே பிறவி முடிவதற்குள் எல்லா ஆசைகளையும் துறந்தால் மறுபடியும் பிறந்து துன்பப்பட வேண்டாம். எப்போதும் மகிழ்ச்சியாக இரு.