ADDED : டிச 07, 2023 10:39 AM
ஜெருசேலத்தை சேர்ந்த கருமி ஒருவனின் மகளுக்கு காய்ச்சல் வந்தது. அங்குள்ள போப்பின் உதவியாளரிடம் சென்றான். அவரோ உன் மகள் குணமடைய இரண்டு வழிகள் உள்ளன. ஆண்டவரை சரணடைந்து ஜெபம் செய். இல்லாவிட்டால் ஆட்டுக்குட்டியை பலி கொடு என்றார். ஜெபம் செய்வதே நலம் என்றான். என்னுடைய ஆட்டு மந்தை வெகுதுாரத்தில் இருக்கிறது என்றான். பணம் தான் உங்களின் மனதை ஆள்கிறது. ஆண்டவர் அல்ல என்றார் உதவியாளர். தவறை உணர்ந்த கருமி வாயடைத்துப் போனார்.