நீங்கள் தினமும் ஐநுாறு ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். தினமும் ஆயிரம் சம்பாதிப்பவரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அப்படி செய்தால் மனநிறைவு தோன்றாது. இதனால் உங்களுடைய அமைதி கெடும். தினமும் முந்நுாறு சம்பாதிப்பவரோடு உங்களை ஒப்பிட்டு பாருங்கள். அவரை விட உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறார் ஆண்டவர் என்பது புரியும். போதும் என்ற மனமே நிம்மதிக்கான வழி என்கிறது நீதிமொழி.