தெய்வீக குழந்தை தோன்றியதன் அடையாளமாக வானில் நட்சத்திரம் மின்னியது. இதை ஞானிகள் மூலம் அறிந்த ஏரோது மன்னர், 'பெத்லகேம் சென்று குழந்தையை தரிசித்த பின்னர் தகவல் சொல்லுங்கள்' என்றார். அவர்களும் பெத்லகேம் நோக்கி நடந்தனர். அவர்களுக்கு வழிகாட்டியபடி வந்த நட்சத்திரம் குழந்தை இருக்கும் இடத்திற்கு வந்ததும் வானில் நின்றது.
மரியாள் பெற்ற தெய்வீக குழந்தையைக் தரிசித்த ஞானிகள் விழுந்து வணங்கி விட்டு பொன், மணி, வாசனை தைலம், சாம்பிராணியை காணிக்கை அளித்தனர். உடனே இந்த நற்செய்தியை மன்னரிடம் சொல்ல விரைந்தனர்.
மரியாள் பெற்ற தெய்வீக குழந்தையைக் தரிசித்த ஞானிகள் விழுந்து வணங்கி விட்டு பொன், மணி, வாசனை தைலம், சாம்பிராணியை காணிக்கை அளித்தனர். உடனே இந்த நற்செய்தியை மன்னரிடம் சொல்ல விரைந்தனர்.