வேலை கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தான் ஸ்டீபன். அவன் தங்கியிருக்கும் வீட்டில் ஜன்னல் வழியாக தெருவை வேடிக்கை பார்த்தான். அப்போது பார்வை குறைபாடு கொண்ட ஒருவர்'பேனா, பென்சில் வேணுமா...' என கூவியபடி விற்பதைக் கண்டான். தினமும் பார்க்கும் நபர் தான் என்றாலும் அப்போது அவரைக் கூர்ந்து கவனித்தான்.
விற்றாலும் விற்காவிட்டாலும் அவரின் குரலில் சோர்வு தென்படவில்லை. ''எப்படி இந்த வேலையில் சோர்வு இன்றி ஈடுபடுகிறீர்கள்'' எனக் கேட்டான். ''சோர்வடையாமல் என்னைக் காப்பாற்ற ஆண்டவர் இருக்கும் போது நான் மட்டும் ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்' என்றான். ஸ்டீபனுக்கு புத்தி வேலை செய்தது. ஊருக்கு போகும் எண்ணத்தை கைவிட்டு நம்பிக்கையுடன் வேலை தேட ஆரம்பித்தான்.