Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/முயன்றால் முடியாதது இல்லை

முயன்றால் முடியாதது இல்லை

முயன்றால் முடியாதது இல்லை

முயன்றால் முடியாதது இல்லை

ADDED : மே 06, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
கர்த்தருடைய வசனம் சொல்லக்கூடாத சில நாடுகளுக்கு, தேவனுடைய வசனத்தைக் கொண்டு செல்ல, வாஞ்சை கொண்ட ஒரு சுவிசேஷ குழுவினர், புதிய வழியைக் கையாண்டனர்.

காலி பாட்டில்களில் சுவிசேஷத்தை (பைபிள் வசனம்) நுழைத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் இருந்து மிதக்க விட்டனர். வேத வசனம் ஒருபோதும் வெறுமையாகத் திரும்புவதில்லை என்பது அவர்களின் திடமான தீர்மானம். பல மாதங்கள் கடந்தது.

ஒருநாள், ஒரு இளைஞன் கடல் அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, தண்ணீரில் மிதந்த ஒரு பாட்டிலை எடுத்தான். அதனுள் மாற்கு எழுதிய சுவிசேஷம் காணப்பட்டது. ஆவலுடன் இரவும் பகலும் வாசித்தான். தன் வாழ்வையே இயேசுவுக்கு அர்ப்பணித்தான். அவன் இருந்த இடம் இனபாடி தீவிலுள்ள மைக்ரோநிசியா. இது கலிபோர்னியா

கடற்கரையில் இருந்து, ஏறக்குறைய 8000 கி.மீ., தொலைவிலுள்ள இடம். அந்தப் பாட்டில் மூன்று ஆண்டு காலம் கடலில் பயணம் செய்து, இளைஞன் கையில் கிடைத்துள்ளது. வேதத்தை வாசித்த அவன், உடனே வேதாகம சங்கத்தாருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

கர்த்தருடைய வேலைக்காக நாம் பிரயாசப்படும் ஒவ்வொரு முயற்சியையும் கர்த்தர் காண்கின்றார். வேத வசனம் ஒருபோதும் வெறுமையாகத் திரும்பாது. உலகின் எந்தவொரு கோடி முனையில் வாழும் ஆத்துமாவையும் சந்திக்க இயேசு வல்லவர். அவர் செய்ய நினைப்பதை தடுப்பவன் யார்?

இதோ சில வசனங்கள்.

* நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும் (நீதி.10:16).

* சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு (நீதி14;23).

* ''எனக்கு பிரியமான சகோதரரே! கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக''.(1கொரி.15:58).

* பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன், பலனின் முந்திப் பங்கைடைய வேண்டும்(2 தீமோ 2:6)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us