Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/கண்களின் கடமை

கண்களின் கடமை

கண்களின் கடமை

கண்களின் கடமை

ADDED : ஜன 29, 2018 09:23 AM


Google News
Latest Tamil News
இயேசுவிடம் நீங்கள் ஜெபிக்கும் போது, நமது கண்கள் சுத்தமான பார்வை பார்க்க வேண்டும் எனக்கூற வேண்டும். இதோ அந்த ஜெப வரிகள்.

* என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்தருளும் ஆண்டவரே!

* மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இராதபடி காத்துக்கொள்ளும் ஆண்டவரே!

* இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்துக் கொள்ளும்.

* ஆண்டவரே! என் கண்களை ஏழைகளிடம்இருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ கிருபை செய்யும்.

* விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்களையுடையவர்கள் போல் என் கண்கள் இருக்க கூடாது.

* என் கண் கெட்டதாயிருந்து, சரீரம் இருளடையாதபடி காத்து கொள்ளும்.

* செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனை போல நான் ஆகி விடக்கூடாது.

* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்து கொள்ளும்.

* பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது என்றெண்ணி செயல்பட்டு, சாபத்தை நான் வாங்குகிறவனாய் இராதபடி காத்து கொள்ளும்.

* என் கண்கள் உமது வழியை காணும்படி உதவி செய்யும். என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.

இப்படி ஜெபம் செய்தால், நம் கண்கள் தீயவற்றைக் காண்பதிலிருந்து விலக ஆண்டவர் அருள் செய்வார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us