Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

ADDED : ஏப் 21, 2017 12:20 PM


Google News
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.

* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத் தனத்தில் வீணாகி விட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.

* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வ மக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.

* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அந்த அளவு உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படுவதுமின்றி, கூடவும் கொடுக்கப்படும்.

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும், அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us