ADDED : ஆக 04, 2023 10:31 AM
துப்புரவு பணியில் ஈடுபடும் பெண் தவறாமல் ஆலயத்தை பார்த்து வணங்குவாள். உள்ளே செல்ல மாட்டாள். இதை அங்கிருந்த போதகர் கவனிப்பார். இரண்டு நாட்கள் அவள் அவ்வாறு செய்யவில்லை. அவளோடு பணி செய்பவரிடம் விசாரித்து விபரம் அறிந்தார் போதகர். உடல் நிலை சரியில்லாத அவளுக்கோ நம்மையெல்லாம் பார்க்க யார் வர போகிறார்கள் என்ற ஒரு தாழ்மையான எண்ணம் இருந்தது. அன்று மாலை போதகரும் அவருடைய நண்பர்களும் அவளிடம் நலம் விசாரிக்க பழங்களுடன் சென்றனர். ஆச்சரியப்பட்டாள்.
'எங்கிருந்து வணங்கினாலும் அது உண்மையாக இருந்தால் போதும். அதில் வேஷம் கூடாது' என்றார் போதகர். வழிபாடு என்பது மனதினை பொறுத்து தான் அமைய வேண்டுமே தவிர மற்றவருக்காக அமையக் கூடாது.
'எங்கிருந்து வணங்கினாலும் அது உண்மையாக இருந்தால் போதும். அதில் வேஷம் கூடாது' என்றார் போதகர். வழிபாடு என்பது மனதினை பொறுத்து தான் அமைய வேண்டுமே தவிர மற்றவருக்காக அமையக் கூடாது.