Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அன்பின் தாகம் தணிந்தது

அன்பின் தாகம் தணிந்தது

அன்பின் தாகம் தணிந்தது

அன்பின் தாகம் தணிந்தது

ADDED : ஜூன் 10, 2021 03:38 PM


Google News
அடர்ந்த காட்டில் இரு குருவிகள் இருந்தன. உண்மையான அன்பிற்கு உதாரணமான அவற்றின் வாழ்வில் ஒரு நிகழ்வு நடந்தது. கோடை வெயிலால் குருவிகள் தாகத்தால் வாடின. ஒன்றை ஒன்று தேற்றியபடி ஒரு நீர்நிலையை அடைந்தன. ஆனால் அங்கு தாகத்தை தணிக்கும் அளவில் நீர் இல்லை. அந்த நீர்நிலையில் ஒரு இடத்தில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. ஏமாற்றம் என்றாலும் சமாளித்துக் கொண்டு 'பெண் குருவி குடிக்கட்டும்' என ஆண் குருவி காத்திருந்தது.

இதைப் பார்த்த பெண் குருவியும், 'ஆண் குருவி குடிக்கட்டும்' என நினைத்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து இரண்டும் ஒரே நேரத்தில் நீரில் வாய் வைத்தன. நேரம் ஓடியதே தவிர தண்ணீர் குறையவில்லை. பின்னரே அவை நீர் குடிப்பது போல் பாசாங்கு செய்தது தெரிய வந்தது. தான் நாவறட்சியால் உயிர் விட்டாலும் பரவாயில்லை; தன் இணையின் தாகம் தீர வேண்டும் என்ற அன்பில் ஒன்றை ஒன்று விஞ்சின.

குருவிகளின் அன்பின் ஆழத்திற்கு அதனின் தாகம் தணிந்ததோ இல்லையோ... அவற்றின் அன்பின் தாகம் தணிந்தது. இப்படி நமது குடும்பத்தினர் மீது அன்பு வைத்தால் ஆண்டவரின் அன்புக்கு பாத்திரமாகலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us