Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

ADDED : ஜூலை 16, 2021 02:16 PM


Google News
Latest Tamil News
கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் ஒருநாள் மலைச்சாரல் பக்கமாக நடந்து சென்றார். பாறையின் இடுக்கில் மலர்ச்செடி ஒன்றைக் கண்டார். 'சாட்டர்டன்... நீ இங்கேயா இருக்கிறாய்'' என கண்ணீர் ததும்ப நின்றார். யார் அந்த சாட்டர்டன் தெரியுமா... பதினான்கு வயது கவிஞனான இவன் தத்துவக் கவிதைகள் புனைவதில் வல்லவன். அநாதையான அவன் வறுமையில் வாடியதால் தன் கவிதைகளை ரொட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் காட்டி, பசி போக்க உதவும்படி வேண்டுவான். கடைக்காரரும் சில ரொட்டிகளைக் கொடுப்பார். அரைவயிறு தான் நிரம்பும். அருகிலுள்ள கழிவுநீர் கால்வாய் மீது படுத்து துாங்குவான்.

ஒருநாள் கவிதை ஒன்றை எழுதினான். அதனடியில் புகழ் மிக்க கவிஞரான தாமஸ் கிரேயின் பெயரைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர் ஒருவரிடம் ஒப்படைத்தான். ''ஐயா... தாமஸ் கிரே கொடுத்தனுப்பிய கவிதை இது. அவரால் வர முடியவில்லை. இதற்கான சன்மானத்தைக் கொடுங்கள்'' என வேண்டினான். பத்திரிக்கையாளரும் சன்மானம் அளித்தார்.

தனக்கு கிடைத்த பணத்தில் ரொட்டி வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தான் சிறுவன். பத்திரிகையில் வெளிவந்த கவிதையைக் கண்ட தாமஸ் கிரே வியப்பில் ஆழ்ந்தார். பத்திரிகையாளரிடம் அவர் விசாரித்த போது, ''தாங்கள் அனுப்பியதாகச் சொல்லி சிறுவன் ஒருவன் மூலம் இந்தக் கவிதை கிடைத்தது'' எனத் தெரிவித்தார்.

கவிதையோ அற்புதமாக இருந்தது. சிறந்த கவிஞனான அச்சிறுவனை சந்திக்க வந்தார் தாமஸ் கிரே. விசாரித்த போது ரொட்டிக் கடைக்காரருக்குத் தான் அவனைத் தெரியும் எனக் கேள்விப்பட்டார். ரொட்டிக் கடைக்காரர், ''அதோ பாருங்கள்... அந்த கால்வாய் மீது துாங்குகிறான்'' என கைகாட்டினார். எழுப்பிய போது அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரத்திற்கு முன்பு தான் இறந்திருப்பது தெரிந்தது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட வேர்ட்ஸ் வொர்த் அழகிய மலர்களைக் காணும் போதெல்லாம் சாட்டர்டனை எண்ணி குழந்தை போல கண்ணீர் சிந்துவார்.

ஆண்டவரின் அன்புக் குழந்தைகளை நல்ல நெஞ்சங்கள் ஒருபோதும் மறப்பதில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us