Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உத்தரவு இட்டதற்கு நன்றி

உத்தரவு இட்டதற்கு நன்றி

உத்தரவு இட்டதற்கு நன்றி

உத்தரவு இட்டதற்கு நன்றி

ADDED : ஏப் 22, 2021 04:41 PM


Google News
Latest Tamil News
ஜார்ஜ் முல்லர் என்னும் ஆங்கிலேயர் யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை. அவரின் பிரார்த்தனையால் பலன் அடைந்தவர்கள் பணம் கொடுப்பது வழக்கம்.

அனாதை சிறுவர்களுக்கு விருந்தளிக்க விரும்பிய அவர் பிரார்த்தனை செய்தார்.

விடுதியின் பொறுப்பாளரிடம் விருந்துக்கு தயாராக இருக்கும்படி கூறினார்.

குழந்தைகள் ஆசையுடன் காத்திருந்தனர். மேஜையில் தட்டு, கரண்டி, தண்ணீர் எடுத்து வைக்கப்பட்டன.

''உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் பிள்ளைகள் அமர்ந்தால் ஏமாந்து போவார்களே!” என்று எண்ணிக் கொண்டார்.

சாப்பாடு இல்லாமல் எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது முல்லரிடம் கோபித்துக் கொண்டார் பொறுப்பாளர்.

“கவலை வேண்டாம். உணவு தருவார் ஆண்டவர். சாப்பாட்டு மணியை அடியுங்கள்” என்றார்.

மணி ஒலிக்க, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்தனர்.

அங்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் நிறைய உணவு இருந்தது.

“ஐயா! எங்கள் முதலாளி இந்த உணவை உங்களிடம் தரச்சொன்னார்'' என டிரைவர் கூறினார். நடந்தது இதுதான்.

தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் ஒருவர். ஏதோ ஒரு காரணத்தால் விருந்து தடைப்பட்டது. ஆதரவற்றோருக்கு கொடுக்க முடிவு செய்தார்

“ஆண்டவரின் உத்தரவால் நமக்கு விருந்து கிடைத்துள்ளது. நன்றியுடன் உண்போம்” என்றார் முல்லர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us