Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

ADDED : அக் 10, 2021 05:22 PM


Google News
Latest Tamil News
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் எட்மண்ட் ஹிலரி. அவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய பலமுறை முயன்று, தோல்வியை சந்தித்தார். ஒருசமயம் அவர் பாதி துாரம் ஏறிய பின், முடியாமல் திரும்பி விட்டார்.

அப்போது ஒரு நிருபர், 'அடுத்தமுறையாவது வெற்றி பெறுவீர்களா' எனக்கேட்டதற்கு, 'நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்றார் ஹிலரி.

'எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்' என நிருபர் கேட்டார்.

'என்னோடு சேர்ந்து என் முயற்சி மட்டுமே வளரும். எவரெஸ்ட் இனிமேல் வளராது' என்றார்.

அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. அடுத்த முறை அவர் மலையின் உச்சியை அடைந்தார்.

கடலின் அலைகள், பூமியின் சுழற்சி, சூரியனின் உதயம் எப்போதும் மாறுவதில்லை. அது போல் நாமும் முயற்சியை கைவிடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us