ADDED : அக் 10, 2021 11:56 AM

போதகர் ஒருவர் பேசும் திறனற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு கரும்பலகையில், 'பேசும் திறனற்றவர்களாக ஆண்டவர் ஏன் எங்களை படைத்தார்' என எழுதியிருப்பதைக் கண்டார். அதை கண்டும் காணாதது போல் பேச்சை தொடங்கினார். ஆனால் அவரால் தொடர்ந்து பேசமுடியாதபடி மாணவர்கள் கூச்சலிட்டனர். கரும்பலகையில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டுமோ என பயந்தார்.
திடீரென ஒரு மாணவன் 'ஆண்டவரே.. உம்முடைய பார்வைக்கு எல்லாம் நலமாக இருக்கிறது' என்று கரும்பலகையில் எழுதினான். என்ன ஆச்சரியமான பதில். அதாவது, 'அவர் எல்லோரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறார்' என்னும் பொருளில் அது இருந்தது. தன்னம்பிக்கை இருந்தால் அவர் கொடுத்த குறையை கூட பரிசாக கருதலாம்.