ADDED : ஜூலை 16, 2021 04:25 PM

மகிழ்ச்சியாக வாழ்வதையே நாம் அனைவரும் விரும்புகிறோம் அதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் சிரிப்பு வாரம் என நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது அவர்களின் எண்ணம். மனஅழுத்தம் ஏற்படும் போது மனம் விட்டுச் சிரித்தால் கவலை பறந்தோடும் என்பதே உளவியலாளர்களின் முடிவு.
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் மனஅழுத்தம் குறைவதில்லையே. பிறருக்கு நன்மை செய்வதே மேலான ஞானம். இதற்கும், மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பார்டல் பெரைரி. ஒருமுறை அவர் இந்தியாவிற்கு பயணம் செய்து விட்டு தாய்நாட்டிற்கு திரும்பினார். அவரது தாய் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மகனை அழைத்து வர வண்டியை அனுப்பி வைத்தார். பார்டல் பெரைரியை முன்பின் பார்க்காதவர் அந்த வண்டிக்காரர்.
''அம்மா... உங்களின் மகனை எப்படி அடையாளம் காண்பது'' என்று கேட்டார்.
'' பயணிகள் இறங்கும் போது யார் ஒருவர் பிறருக்கு உதவி செய்கிறானோ அவன் தான் என் மகன்'' என்றார்.
ரயில் வந்து நின்றதும் உன்னிப்பாக கவனித்தார் வண்டிக்காரர். முதியவர் ஒருவருக்கு ரயிலை விட்டு இறங்க உதவிக் கொண்டிருந்தார் ஒருவர். முதியவரின் பொருட்களை கீழே இறக்க கைகொடுத்தார். அந்த நபரிடம் வண்டிக்காரர் விசாரித்த போது தாய் சொன்ன விஷயம் சரியாக இருந்தது. அவர் தான் பார்டல் பெரைரி.
பிறருக்கு உதவும் போது நம்மால் பயன் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவர். உதவிக்கரம் நீட்டியவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் கிடைக்கும்.
'ஏழைக்கு இரங்குகிறவர்கள் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்கள்'