ADDED : அக் 06, 2023 03:10 PM

வாழ்கையில் எல்லாம் ஆண்டவர் செயலே என கருதுபவன் ஜேம்ஸ். பணம் இருந்தால் போதும் என நினைப்பவன் ஜெபாஸ்டின். புகைப்படக்கலைஞர்களான இருவரும் இயற்கை காட்சிகளை படம் பிடித்துக் கொண்டே மாலை நேரம் ஆகியது கூட தெரியாமல் காட்டிற்குள் வந்து விட்டனர். அப்போது தான் அலுவலகப்பணி பற்றிய நினைப்பு அவர்களுக்கு வந்தது. விரைவாக ஊருக்குள் செல்ல வேண்டும் என நினைக்கும் போது அங்கிருந்த குடிசை அவர்கள் கண்ணில் பட்டது. அருகில் சென்ற போது காட்டிற்குள் வழி தவறி வருவோருக்கு உதவும் ஓடக்காரனின் குடிசை அது என்பது தெரிந்தது. பிறகு என்ன...
ஓடக்காரன் கேட்ட பணத்தை ஜெபாஸ்டின் கொடுக்க அவரின் உதவியால் இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அப்போது ஜேம்ஸ் பெருமூச்சு விட்ட படி ஆண்டவர் நம்மை காப்பார் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை என்றான். நம்பிக்கையுடையவர்கள் கைவிடப்படுவதில்லை என்கிறது பைபிள்.