அரசமரக் கன்றை தோட்டத்தில் நட்டு வைத்தார் விவசாயியான ஜோசப். காற்றில் சாயாமல் இருக்க குச்சியுடன் சேர்த்துக் கட்டியதோடு முள்வேலியும் அமைத்தார்.
புதரில் இருந்த கள்ளிச்செடி ஒன்று, ''இப்படி அடிமை வாழ்க்கை உனக்கு தேவையா? இப்படி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கிறாயே'' என்றது. அடிமையாக வாழ்வதை எண்ணி அரசமரக்கன்று வருந்தியது. இதற்கிடையில் ஒருநாள் விவசாயியின் மகன் புல்டோசரால் தோட்டத்தைச் சுத்தப்படுத்திய போது, 'அரச மரத்திற்கு மட்டும் ஏன் வேலி கட்டியிருக்கு' எனக் கேட்டான்.
'சீக்கிரம் வளர்ந்து சீக்கிரமே அழிவது அல்ல அரசமரம். நுாறாண்டுகள் வாழும். அதை ஆடு,மாடு கடிக்காதபடி வேலியிட்டிருக்கேன்'' என்றார் விவசாயி.
வேலி சுதந்திரத்தை பறிப்பதற்காக அல்ல. நன்கு வாழவே'' என்பதை அறிந்து மகிழ்ந்தது அரசமரம்.
நீங்கள் அரச மரமா! கள்ளிச் செடியா என்பதை முடிவு செய்யுங்கள்.