
மன்னர் ஒருவர் போட்டி ஒன்றை அறிவித்தார். ''எல்லையிலுள்ள கோட்டைக் கதவைக் கைகளால் திறக்க வேண்டும். வெற்றி பெற்றால் பாதி நாடு. தோற்றால் ஒரு கை வெட்டப்படும்'' என அறிவித்தார். பயத்தால் பலரும் போட்டிக்குச் செல்லவில்லை. படிக்காத இளைஞன் ஒருவன் பங்கேற்றான். 'தோற்றால் உன் நிலைமை என்னாகும் என யோசித்தாயா'' என பலரும் அவனைக் கேட்டனர். அதற்கு அவன், 'வெற்றி பெற்றால் நான் அரசன், தோற்றால் ஒரு கை தானே போகும். உயிர் இல்லையே' எனச் சொன்னான். கோட்டையின் கதவை இளைஞன் தள்ளினான்... திறந்தது கதவு. காரணம் கதவில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. பலரும் தோல்வி பயத்தால் முயற்சிப்பதே இல்லை.
நம்புங்கள் நல்லதே நடக்கும் என்கிறது பைபிள்.
நம்புங்கள் நல்லதே நடக்கும் என்கிறது பைபிள்.