Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/காத்திருந்து... காத்திருந்து...

காத்திருந்து... காத்திருந்து...

காத்திருந்து... காத்திருந்து...

காத்திருந்து... காத்திருந்து...

ADDED : பிப் 23, 2024 11:27 AM


Google News
Latest Tamil News
வெளியூரில் இருந்து வந்த ஜான், மனைவியுடன் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலுக்கு சாப்பிட சென்றான். மெனு கார்டை பார்த்து விரும்பிய உணவுகளை சர்வரிடம் தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்ன சர்வர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பொறுமையிழந்த ஜானின் மனைவி, 'வாருங்கள் வேறு ஓட்டலுக்குச் செல்லலாம்' என சிடுசிடுத்தாள். 'எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படக் கூடாது' என்றான் ஜான். தாமதத்திற்கு மன்னிக்கவும் என சொல்லியபடியே சர்வர் ஆர்டர் செய்த உணவுகளை எடுத்து வந்தார். சாப்பிட்டு முடித்த ஜான் புன்னகையுடன் 50 ரூபாயை டிப்சாக கொடுத்து விட்டு புறப்பட்டான். அப்போது அலைபேசியில் பேசியவர், ''ஜான்...எப்ப வருவ... நீ இல்லாததால் ரொம்பவே சிரமப்படுறோம். சீக்கிரம் வந்து விடு'' என்றார் முதலாளி. ''நாளை வந்து விடுகிறேன்'' எனத் தெரிவித்தான். கனிவான உபசரிப்பு, புன்னகை சர்வருக்கான ஆபரணம். ஏனெனில் வெளியூரில் அவனும் ஒரு ஓட்டலில் சர்வராகத்தான் பணிபுரிகிறான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us