ADDED : பிப் 09, 2024 11:18 AM
ராணுவத்தில் ஒரு பகுதியினரை, இருக்கும் இடத்தில் இருந்து வேறு பகுதிக்குச் செல்ல அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். ராணுவத்தின் செயலரான எட்வின் ஸ்டான்டன் அந்த உத்தரவை ஏற்க மறுத்ததோடு, 'முட்டாள்' என்று லிங்கனை விமர்சித்தார்.
இதைக் கேள்விப்பட்டு, 'எட்வின் அப்படிச் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எப்போதும் நிதானமாக செயல்படுபவர்; ' என அவரை லிங்கன் பாராட்டினார். மேலும் 'நான் செய்த முட்டாள்தனத்தை அறிய விரும்புகிறேன்'' என்றும் தெரிவித்தார்.
ஏற்க மறுத்தது ஏன் என விளக்கினார் எட்வின். தவறை உணர்ந்த லிங்கனும் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் லிங்கனிடம், ' தங்களை இழிவாக பேசியிருக்கக் கூடாது. அதற்காக வருந்துகிறேன்'' என்றார் எட்வின்.
லிங்கனின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். மோசமான விமர்சனத்தை பொறுத்துக் கொண்டார்.
விமர்சனம் செய்தவரை பழிவாங்கும் உணர்வுடன் பதிலடி கொடுக்கவில்லை. தாழ்மையுடன் பிரச்னையைக் கையாண்டார். இதுதான் நமக்கான படிப்பினை. விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் மேலானது என்கிறது பைபிள்.