ADDED : பிப் 02, 2024 02:34 PM

அலெக்சாண்டர் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க தயாரானார். அந்த நேரத்தில் மற்றொரு எதிரியும் போர் தொடுக்க ஆயத்தமானார். தன்னிடம் பணிபுரியும் நான்கு தளபதிகளை அழைத்த அலெக்சாண்டர், சற்று தொலைவில் நடப்பட்டிருந்த கொடி கம்பத்தைக் காட்டி, ''உங்கள் நால்வரில் யார் முதலில் அங்கு நடப்பட்டுள்ள கொடியை எடுத்து வருகிறீர்கள் என்று பார்க்கலாம்'' என்றார். அவர்களில் மூவர் ஏன் எதற்கு என விளக்கம் கேட்ட பின்னர் ஓடத் தொடங்கினர். ஆனால் முதலாமவர் மட்டும் கட்டளைக்கு கீழ்ப்படிந்து செயலில் இறங்கினார். மற்றவர்கள் தாமதமாகச் சென்றனர். ஆனால் யாராலும் அந்த கொடியை அசைக்கக் கூட முடியவில்லை.
முதலில் ஓடிச் சென்றவரிடம் போரிடும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, 'ஏன்... எதற்கு... என காரணம் கேட்காமல் தலைமைக்கு கட்டுப்படுபவனே செயல்வீரன்'' என்றார் அலெக்சாண்டர்.
முதலில் ஓடிச் சென்றவரிடம் போரிடும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, 'ஏன்... எதற்கு... என காரணம் கேட்காமல் தலைமைக்கு கட்டுப்படுபவனே செயல்வீரன்'' என்றார் அலெக்சாண்டர்.