Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/திறமையான விற்பனையாளர்

திறமையான விற்பனையாளர்

திறமையான விற்பனையாளர்

திறமையான விற்பனையாளர்

ADDED : ஜன 05, 2024 11:01 AM


Google News
சகாயத்திற்கு வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள பெரிய சூப்பர் மார்கெட் விற்பனை பிரிவில் சேர்ந்தான்.

முதல் நாள் மாலையில் பணி முடிந்ததும் அவனை அழைத்தார் முதலாளி. வேலையெல்லாம் பிடித்துள்ளதா சகாயம், இங்கு நிரந்தரமாக பணி செய்ய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு

10 வாடிக்கையாளரை அறிமுகம் செய்ய வேண்டும். இன்று நீ எத்தனை பேரை வாடிக்கையாளர் ஆக்கினாய் எனக் கேட்டார் முதலாளி. ஒருவரை தான் என்றான் சகாயம். பரவாயில்லை. அவரிடம் எத்தனை டாலருக்கு விற்பனை செய்தாய் எனக்கேட்டார் முதலாளி.

பல மில்லியன் டாலர் என்றான் அவன். அதைக்கேட்ட முதலாளிக்கு மனம் துாக்கி வாரி போட்டது. அப்படி எதனை விற்பனை செய்தாய் எனக்கேட்டார். அவருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள்ளும், அதற்கான துாண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன். அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா எனக் கேட்டேன். அவர் இல்லை என்றார்.

நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஓர் இருபது அடி நீளப்படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர் என கேட்டு அதைக் கொண்டு

செல்ல பெரிய டீலக்ஸ் கார் ஒன்றையும் விற்றேன். கடல்நடுவே ஓய்வில் அவருக்கு இளைப்பாற இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன். ஆச்சரியமாக கேட்ட முதலாளி இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார். என்னால் நம்ப முடியவில்லையே என ஆச்சரியத்துடன் கேட்டார்.

இல்லை, அவர், தலை வலிப்பதாகவும், தலைவலிக்கு மாத்திரை வாங்க வந்ததாகவும் தான் சொன்னார்.

நான் தான் மீன் பிடிக்கும் பொழுது போக்கு தலைவலிக்கு நல்ல மருந்து எனச்

சொன்னேன் என்றான். அதைக்கேட்ட முதலாளி சகாயத்தின் தாய்நாடான இந்தியா இருக்கும் திசை நோக்கி வணங்கினார்.

இதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாய் என அவனிடம்

கேட்க ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தேன் எனச் சொல்லிய பதில் அவரை பிரமிக்க வைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us