நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிருங்கள். ஒரு வீட்டுக்குச் சென்று அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்படும். தங்களின் நண்பரின் இல்லத்திற்கு வந்த ஒரு கணவனும், மனைவியும் நீண்ட நேரமாகப் பேசினார். அந்த ஊருக்கே மாற்றலாகி அவர்கள் வந்து விட்டதையும், வாடகை வீட்டுக்காக அலைந்ததையும், குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பட்ட பாட்டினையும், தண்ணீருக்காக அலைந்தது பற்றியும் விவரித்தனர். அதைக் கேட்டபடியே இருந்த நண்பருக்கு சலிப்பு தட்டியது.
ஒரு கட்டத்தில் வெறுப்புடன், “சரி... எனக்கு துாக்கம் வந்துவிட்டது. நீங்கள் கிளம்புகிறீர்களா?” என்றார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதும், அதிக நேரம் பேசுவதும் கூடாது.