ADDED : மார் 07, 2025 08:43 AM
பல ஆண்டுகள் கடந்த பின் ஒருநாள் பள்ளித் தோழர்களான டேவிட்டும், பால்ராஜும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டனர். தொழிலதிபரான பால்ராஜை தயக்கமுடன் பார்த்தபடி, ''டேவிட்... நாம் இருவரும் ஒன்றாக தான் பள்ளி முதல் கல்லுாரி வரை படித்தோம். இருவரும் நடுத்தரமான குடும்பத்தில் தான் வாழ்ந்தோம். ஆனால் நீ மட்டும் பணக்காரனாக மாறி விட்டாயே'' எனக் கேட்டான் டேவிட்.
'என் அப்பா சொன்ன அறிவுரையே காரணம். * பிறரை விட அதிகமாக கற்றுக்கொள்.
* பிறரை விட கூடுதலாக உழைத்திடு.
* பணம் சேர்ந்தாலும் எளிமையாக வாழ்.
இதை பின்பற்றியே வெற்றியாளனாக இருக்கிறேன்'' என்றான் பால்ராஜ். 'உன் அப்பா... அப்பப்பா... பாராட்டுக்குரியவர்'' என சிரித்தான் டேவிட்.