ADDED : டிச 20, 2024 10:38 AM
இயேசுவின் சீடரான பேதுருவின் சகோதரர் அந்திரேயா. இவர் முதலில் ஊழியப்பணி செய்யச் சென்ற இடம் ஜார்ஜியா. அங்குள்ள காக்கசீய மலையடிவாரத்தில் பணியைத் தொடங்கினார். பின் இஸ்தான்புல்லுக்குச் சென்றார். அங்கு ஊழியப்பணி செய்ததால் சிறைத்தண்டனை பெற்று வெளியேறினார். பின்னர் கிரேக்கம் சென்றார். அதையறிந்த கிரேக்க மன்னர் ஏஜியேட்டஸ் அந்திரேயாவை எச்சரித்தும் அவர் அஞ்சவில்லை. பணியைத் தொடர்ந்ததால் சிலுவை மரணம் அளிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டண்டன் மன்னர் அந்திரேயாவின் எலும்புகளை இஸ்தான்புல் தேவாலயத்தில் காட்சிக்கு வைத்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டண்டன் மன்னர் அந்திரேயாவின் எலும்புகளை இஸ்தான்புல் தேவாலயத்தில் காட்சிக்கு வைத்தார்.