ADDED : நவ 07, 2024 09:24 AM
சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஜான். உணவில் சிறு சிறு துகள்கள் இருப்பதை உணர்ந்தார்.' ஏன்... இவள் இவ்வளவு அஜாக்கிரதையாக சமைக்கிறாள்?'என நினைக்கும் போதே நறுக்கென அதைக் கடித்து விட்டார். பரிமாறிக்கொண்டிருந்த அவரது மனைவி.'என்ன கல்லைக் கடித்து விட்டீர்களா?' எனக் கேட்டாள். கோபத்தை வெளிப்படுத்தாமல் சிரித்தபடி 'அதோடு கொஞ்சம் சோறும் இருக்கிறது பரவாயில்லை' என்றார். ஜான் சொன்ன வார்த்தை அவளின் மனதை பாதித்தது. இனி சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என உறுதி கொண்டாள்.
ஒருவேளை அவர் சப்தமாக பேசியிருந்தால் நானும் சண்டை போட்டிருப்பேன். ஆனால் அவரோ கோபப்படவில்லை என வெட்கப்பட்டாள்.
விட்டுக் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.
ஒருவேளை அவர் சப்தமாக பேசியிருந்தால் நானும் சண்டை போட்டிருப்பேன். ஆனால் அவரோ கோபப்படவில்லை என வெட்கப்பட்டாள்.
விட்டுக் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.