ADDED : அக் 29, 2024 12:26 PM
கிரேக்க நாட்டை சார்ந்தவர் ஹிப்போகிரேட்டீஸ். நோய்கள் உண்டாவதற்கு காரணம் ஆண்டவர் என்ற கருத்தை உடைத்தெறிந்தவர் இவரே. நோய் உண்டாக காரணம் மனிதர்களே என்ற உண்மையைக் கண்டறிந்தார். உடல்நலம் பெற உடல் வெப்பத்தை சீராக வைத்தல், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்தல் அவசியம் என வலியுறுத்தினார். அதனால் 'நவீன மருத்துவத்தின் தந்தை' எனப் பெயர் பெற்றார். மருத்துவம் பயிலும் மாணவர்கள் இவரின் பெயரைச் சொல்லி மனித குலத்திற்கு சேவை செய்வோம் என இன்றும் உறுதி மொழி எடுக்கிறார்கள்.