Dinamalar-Logo
Dinamalar Logo


இரக்கம்

இரக்கம்

இரக்கம்

ADDED : செப் 27, 2024 12:44 PM


Google News
Latest Tamil News
மனிதர்களிடம் இருக்க வேண்டியது இரக்கம். இதை மறந்தால் அவன் மிருகம். ஆனால் மிருகம் கூட மனிதராக மாறும் அதிசயம் அவ்வப்போது நடக்கிறது.

கேரளாவில் நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவில் நடுக்காட்டில் நள்ளிரவில் நின்ற மூதாட்டி, அவரது பேத்தியை மூன்று கொம்பன் யானைகள் வழிமறித்தன. மூதாட்டி அவற்றிடம் ஆதரவற்ற நிலையைச் சொல்லி அழுதபடி மயங்கி விட்டார். மறுநாள் மதியம் மீட்புக்குழுவினர் வரும் வரை யானைகள் பாதுகாப்பாக நின்று வழியனுப்பி வைத்தன. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பறவை, விலங்கு என எல்லா உயிர்களிடமும் இரக்க குணம் இருப்பதை உணர முடிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us