ADDED : ஜூலை 18, 2024 12:17 PM

பலசாலி என தன்னைக் காட்ட விரும்பிய இளைஞன் ஒருவன் பாலைவனத்தில் வேகமாக நடந்தான். இரண்டு மணி நேர நடைக்குப் பின்னர் சோர்வுக்கு ஆளானான். ஒருஅடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கீழே அமர்ந்தான். அவனைக் கடந்து சென்ற பெரியவர் ஒருவர், ' இது இளைப்பாற ஏற்ற இடம் அல்ல'' என அவனை எழச் சொன்னார்.
ஆனால் முடியவில்லை. சக பயணிகளின் உதவியுடன் ஒரு ஒட்டகத்தின் மீதேற்றினார். சற்று துாரத்தில் ஒரு மரத்தடியில் இறங்கி விட்டு, ''எடுத்த எடுப்பில் குதித்தோடும் குதிரை விரைவில் சோர்வுக்கு ஆளாகும். ஆனால் அடி மீது அடி வைத்து நடக்கும் ஒட்டகம் எவ்வளவு நேரம் ஆனாலும் களைப்பு அடையாது'' என்றார். உண்மையை உணர்ந்த இளைஞன் இனி நிதானமாக நடப்பேன்' என்றான்.