ADDED : செப் 10, 2023 05:58 PM
ராணுவத்தில் பணியாற்றிய ஜான் ஊரிலுள்ள பெற்றோரிடம் தொடர்பு கொண்டான். 'என்னோடு பணிபுரியும் வீரன் ஒருவனை வீட்டிற்கு அழைத்து வரலாமா' எனக் கேட்டான். 'தாராளமாக அழைத்து வா' என்றனர். 'போரில் ஒரு கால், கையை அவன் இழந்து விட்டான்.
நாம்தான் அவனை பாதுகாக்க வேண்டும்' என்றான் ஜான். 'உன் நண்பனை தனி வீட்டில் வைத்து பாதுகாக்கலாம். நம் வீட்டோடு சேர்க்க முடியாது' என்றனர் அழுத்தமாக.
சில நாட்கள் கழித்து ராணுவத்தில் இருந்து, 'உங்கள் மகன் தற்கொலை செய்து விட்டான்' என தகவல் வந்தது. 'கை, கால் இழந்த நிலையில் எனக்கு வாழப் பிடிக்கவில்லை' என ஜான் எழுதிய கடிதம் ஒன்றும் அப்போது கிடைத்தது. உண்மையை உணராமல் மகனை புறக்கணித்து விட்டோமே என பெற்றோர் மிகவும் வருந்தினர். ஒன்றை இழந்த பிறகு எதுவும் நம்மால் செய்ய முடியாது; இருக்கும் போதே அதன் அருமையை உணருங்கள்.